fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தொழிலாளர் விழிப்புணர்வு முகாம்

கோவையில் தொழிலாளர் விழிப்புணர்வு முகாம்

கோவையை அடுத்த ஆலாந்துறையில் உள்ள சௌடேஸ்வரி ஹாலில் தொழிலாளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.செல்வராஜ் கலந்து கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர் சட்டங்கள் அரசு வழங்கும் நல வாரிய திட்டங்கள் குறித்தும் பேசினார். ஸ்கை குளோபல் பவுண்டேசன் அமைப்பாளர் தலைவர் சதீஸ் தங்கப்பன், பவுண்டேசன் சார்பாக பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு சுயதொழில் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதா கவும் தெரிவித்தார்.

முன்னதாக மறைந்த விடுதலைப் போராட்ட வீரர், தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ஜெசிகா மில்லிங்கன், பி.அறிவொளி, புவனாம்பாள் சுப்பரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் இருநூற்றுக்கும் அதிகமான உழைக்கும் பெண்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img