fbpx
Homeபிற செய்திகள்கும்கி யானை சின்னத்தம்பி உதவியுடன் காயமடைந்த மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி தீவிர சிகிச்சை

கும்கி யானை சின்னத்தம்பி உதவியுடன் காயமடைந்த மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி தீவிர சிகிச்சை

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள ஆதி மாதனூர் கிராமத்துக்குள் புகுந்த மக்னா வகையை சேர்ந்த ஆண் காட்டு யானை ஒன்று அங்கிருந்த விவசாய தோட்டத்தில் முகாமிட்டது.

விரட்டினாலும் அவ் விடத்தை விட்டு அகலாமல் குடியிருப்புகள் மற்றும் சாலை களில் உலா வந்தது. மேலும் யானை மிகவும் சோர்வுடனும் யாரேனும் அருகில் சென்றால் விரட்டிக் கொண்டும் இருந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் வாய்பகுதியில் ஏற்பட்ட புண் காரணமாக கடந்த சில நாட்களாக உணவோ தண்ணீரோ அருந்த இயலாமல் தவிப்பதும் இதனால் யானை ஆக்ரோஷமாக இருப்பதையும் கண்டறிந்தனர்.

இதை அடுத்து நேற்று முதல் தீவிரமாக யானையை கண்காணித்து வந்து வனத் துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதை அடுத்து பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து கும்கி யானை சின்னத்தம்பி நேற்று இரவு ஆதிமாதனூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் இன்று சின்னத்தம்பி கும்கி யானை உதவியுடன் காட்டு யானை மக்னாக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வாயில் காயம்பட்டுள்ள பெண் யானைக்கு முதற்கட் டமாக 20 லிட்டர் தண்ணீர் கொடுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். நாக்கின் நடுவில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. யானை கடந்த நான்கு வாரமாக உணவு உட்கொள்ளவில்லை எனவும் மருத்துவர் தகவல் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img