fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமாகா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சி யினருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தெற்கு வட்டார தலைவர் சென்னகேசவன், வடக்கு வட்டார தலைவர் அழகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நகரத் தலைவர் ஜெய்சங்கர் வரவேற்றார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி 2026 பேரவைத் தேர்தலை எதர்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

அதில் கிராம கமிட்டி அமைத்தல், பூத் கமிட்டி அமைப்பது தெருமுனை பிரச்சாரம் செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மண்டல மகளிர் அணி தலைவி கான்பாய், மாவட்டத் தலைவர் மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவி மாலா, மாவட்டச் செயலாளர் ஜெக தீசன், எஸ்சி-எஸ்டி மாவட்ட தலைவர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட விவசாய அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img