சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை அங்கீகரித்து கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களான கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரிகளின் சார்பாக ஜூலை 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில், சாலை பாதுகாப்பு பற்றி பொதுமக்களிடையே அதிகமான சாலை பாது காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதை அங்கீகரித்து, கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன், போக்கு வரத்து காவல்துறை உதவி இயக்குனர் மதிவண்ணன் ஆகியோர், கோவை உயிர் கிளப்புடன் இணைந்து கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழை வழங்கினார்கள்.
கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் மு.அகிலா கூறியதாவது:
சாலைகளில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவதன் மூலம் உயிரையும், உடல் நலத்தையும் குடும்பத்தையும், மற்றும் குடும்பப் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
எனவே சாலை பாதுகாப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தும் நோக்கில் கே.பி.ஆர். கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது, இது போன்ற அங்கீகாரங்கள் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கு விக்கும் என்றார்.