கோவை மத்திய மண்டலம் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடையின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர் மாநகராட்சி அனுமதியின்றி இடிக்கப்பட்டதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல வைக்கவும், சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
உடன் மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி வருவாய் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.