fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் கேபிஆர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் கேபிஆர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோயம்புத்தூர் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மாணவர் பரிமாற்றம், பேராசிரியர் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் லாரன்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகம், தென் கொரியாவின் ஜியோன்புக் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் தைவானின் தம்காங் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்துத்திட்டுள்ளது.

மேலும் 13 நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் பயிலும் கேபிஆர் பொறியியல் கல்லூரி, இது போன்று 50க்கும் மேற்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு கூட்டு நடவடிக்கைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img