fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்லில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 6,040 பேர் பயன் - அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல்லில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 6,040 பேர் பயன் – அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இலுப்புலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்‌  மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 31 பயனாளிகளுக்கு ரூ.20.05 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  “குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை எய்திடும் வகையில் முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என அறிவித்தார்கள். 

அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் முறையாக கணெக்கடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வெளிப்படையான முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தகுதி உள்ள அனைவருக்கும் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3 தவணையாக தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கூடுதல் தொகை தேவைப்படுவர்களுக்கு ரூ.1.00 லட்சம் வரை வங்கியில் கடனுதவி வழங்கப்படுகிறது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாத வகையில் அனைவருக்கும் வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டிலேயே அதிக பயனாளிகள் நாமக்கல் மாவட்டத்தில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,040 பயனாளிகளுக்கு ரூ.213.21 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.  

இது தொடர்பான இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்‌ மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் இலுப்புலி சேர்ந்த ராமசாமிக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார். 

நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணையினை பெற்ற பயனாளி   தமிழ்நாடு முதலமைச்சர்,  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img