காருண்யா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி டெல்லியின் தொழில்நுட்ப புதுமை மையம் உடன் இணைந்து இணை புதுமை மையத்தை நிறுவியுள்ளது. இந்த ஒத்துழைப்பு, முன்னணி ஆராய்ச்சி, தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் சந்தைக்கு முற்றிலும் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.ஐ.டி டெல்லி 5 ஆண்டு காலத்தில் ரூ.1.25 கோடி நிதியுதவியை வழங்குகிறது.
இந்நிலையில், காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மையத்திற்கான தொடக்க விழாவில் ஐ.ஐ.டி டெல்லி IHFC நிறுவனத்தின் தலைவர் அஷுதோஷ் சர்மா மற்றும் டாக்டர் ஆகாஷ் கலந்து கொண்டு, புதிய தொழில்முனைவோரையும், புதுமையான கண்டுபிடிப்புகளையும் உருவாக்கும் மையமாக இது செயல்படும் என தெரிவித்தனர்.
இது மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் சந்தைப்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதற்கு தேவையான நிபுணத்துவத்தையும் ஆதரவையும் வழங்கும்.



