கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தேசிய மாணவர் படை 6 (TN) மெடிக்கல் கம்பெனி பிரிவு மாணவர் பிரகதீஸ் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் மண்டல கோவை பிரிவின் சார்பில் ஆக்ராவில் உள்ள ஏர்போர்ஸ் பயிற்சிப் பள்ளியில் நடந்த உயர்மட்டப் பயிற்சியில் வெற்றிகரமாகப் பங்கேற்றுள்ளார்.
மிகவும் கடினமான பயிற்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மூன்று வார உயர்மட்டப் பயிற்சியை மாணவர் பிரகதீஸ் சிறப்பாக நிறைவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளார்.
இந்தப் பயிற்சியானது மாணவர்களின் ஒழுக்கம், மனத் தாங்கும் திறன், தலைமைத்துவக் குணங்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் துல்லியமாக முடிவெடுக்கும் திறன் போன்ற அத்தியாவசியப் பண்புகளை வளர்ப்பதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
இந்த பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் தரைப் பயிற்சிகள், பாரசூட் கையாளுதல் மற்றும் விமான நடைமுறைகள், நேரடிப் பறக்கும் பயிற்சிகள், விமானத்திலிருந்து பாரசூட்டில் கீழே குதிக்கும் பயிற்சி போன்ற
கடினமான பயிற்சிகள் இதில் அடங்கும்.
பயிற்சியில் வெற்றிகரமாகப் பங்கேற்று சான்றி தழ் பெற்ற மாணவர் பிரகதீஸை, கோவை மண்டல தேசிய மாணவர் படைப்பிரிவு அலுவலர்கள், கல்லூரியின் என்.சி.சி அதிகாரி (ANO), கல்லூரியின் முதல்வர், மற்றும் நிர்வாகத்தினர் மனதாரப் பாராட்டினர்.



