கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2023-ம் ஆண்டுக்கான ஆண்டு விழா, வேலைவாய்ப்பு தின விழா மற்றும் விளையாட்டு முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
கே.பி.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.பி.ஆர். குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி வழிகாட்டுதலின்படி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெங்களூரு சி டாக் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் மையத்தைச் சார்ந்த முனைவர் எஸ்.டி. சுதர்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சென்னை மெக்கென்சி நிறுவனத்தைச் சார்ந்த முனைவர் கே.கணேஷ் கௌரவ விருந்தினராகவும், கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்ந்த முதல் நிலை மருத்துவர் கார்த்திகேயன் விளையாட்டு தின விழாவினை சிறப்பித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு. அகிலா ஆண்டறிக்கை வாசித்தார்.
மெக்கானிக் நிறுவனத்தின் பொறி யாளர் முனைவர் கே. கணேஷ் பேசுகையில், நடைமுறை வாழ்விலும் சரி தொழில்முறை வாழ்விலும் ஒரு மனிதனுடைய செயலாற்றல் மற்றும் குழு உணர்வோடு உழைத்தல் ஆகிய பண்புகளை தொடர்ந்து மேம்படுத்துவதோடு நேர நிர்வாகத்தையும் ஒரு தினசரி பழக்கமாக கொண்டு செயல்படுவது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.
மருத்துவர் கார்த்திகேயன் பேசும்போது, முறையான உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தவும், ஆரோக்கியமான உணவுகள் எவ்வாறு அன்றாட வாழ்வில் தேவை என்பதையும் குறிப்பிட்டார். ஒரு முழு பொறியாளரின் முழுமையான வளர்ச்சிக்கு அன்றாடம் அவர்கள் செய்ய வேண்டிய சில பயிற்சிகள் குறித்து குறிப்பிட்டார்.
இந்த ஆண்டுக்கான சிறந்த மாண வர்கள் விருது, ஆண்கள் பிரிவில் பயோமெடிக்கல் அனுஷ், பெண்கள் பிரிவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை லட்சுமி பிரபா ஆகியோர் பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், தங்க நாணய மும் பரிசாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவர்களுக்கான விருதும், அவர் களுடைய தொழில் முறை சார்ந்த பிரிவுகள் மற்றும் தனி பிரிவுகள் சார்ந்த விருதுகளும் வழங்கப்பட்டன.
ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆய்வுகளை மேம்படுத்தி முழு முயற்சியுடன் அவற்றை வெற்றிபெறச் செய்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப் பட்டன.
வேலைவாய்ப்பு சாதித்த மாணவர்களுக்கு சம்பளம் பெற்ற மாணவர்களுக்கும், வேலைவாய்ப்புகள் தனித் திறனை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.



