இந்தியாவின் நம்பர் 1 பிக்கப் பிராண்டான பொலேரோ பிக்-அப் தயாரிப்பாளர்களான மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) தனது அனைத்தும்-புதிய பொலேரோ MaXX பிக்-அப் வரிசையை அறிமுகப்படுத்தியது. ரூ. 7.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்குகிறது.
புதிய பொலேரோ MaXX பிக்-அப் வரிசையை குறைந்தபட்ச முன்பணமான ரூ.24,999 ஐ செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
மஹிந்திரா & மஹிந்திரா, ஆட்டோமோட்டிவ் டிவிசன் இன் தலைவர் வீஜய் நக்ரா கூறியதாவது:
மேக் இன் இந்தியா’ முயற்சியில் ஆழ்ந்த உறுதியுடன் உள்ள நிறுவனமாக, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகளை முன்னோடியாக உருவாக்கி மேம்படுத்துவதில் பெருமிதம் கொள்வது மாத்திரமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறோம்.
புதிய பொலேரோ MaXX பிக்-அப் வரிசை, அதிநவீன அம்சங்கள்,
ஒப்பிடமுடியாத ஆற்றல், அதிகபட்ச சுமந்து செல்லும் திறன் மற்றும் அதிக மைலேஜ் ஆகியவற்றை வழங்குகிறது என்றார்.
மஹிந்திரா & மஹிந்திரா , ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி மற்றும் ப்ராடக்ட் டெவலப்மென்ட் தலைவர் ஆர்.வேலுசாமி கூறியதாவது:
புதிய பொலேரோ MaXXபிக்- அப் வரிசைக்கு அடித்தளமாக இருக்கும் மிகவும் பல்பயன்பாடு புதிய இயங்குதளத்தின் இந்த மேம்பாடு ஆனது,மஹிந்திரா ரிசர்ச் வேலியின் பொறியாளர்கள் குழுவின் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதுமையான பணியின் விளைவாக இருக்கிறது.
1.3 டன் முதல் 2 டன் வரையிலான வெவ்வேறு சரக்கு நீளம் மற்றும் சுமக்கும் திறன் கொண்டது என்றார்.



