கொங்குநாடு மருத்துவக் குழுமத்தில் உள்ள கோவை கொங்குநாடு மருத்துவ மனை, கொங்குநாடு கிட்னி சென்டர், கொங்குநாடு இன்ஸ்டிடியூட் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பாக வருடம் ஒருமுறை சுழற்கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவது வழக்கம்.
அதில் கொங்கு நாடு மருத்துவமனை டாக்டர்கள் சார்பில் மூன்று அணிகள் அனைத்து பணியாளர்கள் சார்பில் மூன்று அணிகள், கொங்குநாடு அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பாக 2 அணிகள் என மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொண்டன.
லீக் முறையில் இந்தப் போட்டிகள் சின்னவேடம் பட்டி கௌமார மடாலயம் பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. கடந்த ஆறு வாரம் நடைபெற்ற இந்த லீக் போட்டியின் முடிவில், நேற்று (ஞாயிறு) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொங்கு நாடு மருத்துவமனையின் கிங் வாரியார்ஸ் அணியும், கொங்குநாடு மருத்து வமனையின், கொங்கு பார்மா ரைடர்ஸ் அணியும் மோதின.
இதில் கொங்குநாடு கிங் வாரியார்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பி.ராஜு, கொங்குநாடு கல்லூரி யின் அறங்காவலர் விஜயலட்சுமி ராஜு, கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு, கொங்குநாடு நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் என்ஜினீயர் ஆர்த்தி விஸ்வநாதன் ஆகி யோர் முன்னிலையில் சுழற் கோப்பை வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கி, பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கிரிக்கெட் போட்டியினை கொங்குநாடு மருத்துவமனை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.



