கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ‘நொய்யல் ஆற்றில் ஜவுளிக் கழிவு கள் மாசுபாட்டின் பாதிப்புகளும் பாசி மற்றும் கிராபீன் சவ்வு மூலம் சரி செய்தல் பற்றிய சமூகப் பொருளாதார பகுப் பாய்வும் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் நேற்று தொடங்கியது.
மத்திய கல்வி அமைச் சகத்தின் நிதி நல் கையுடன் இங்கிலாந்தில் உள்ள எக்சீட்டர் பல்க லைக்கழகம், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள தமிழ்துறை, உயிர் தொழில்நுட்பவியல் துறை இணைந்து இந்த பயிலரங்கை நடத்துகின்றன.
எக்சீட்டர் பல்கலைக்கழக பேராசிரியரும், பயிலரங்கின் முதன்மை ஆய்வாள ருமான டேவிட் இயன் பென்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசி னார்.
கொங்குநாடு கல்லூரி செயலர், இயக்குநர் வாசுகி தலைமை உரையாற்றினார்.
இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழக பேராசிரியர் செந்திலரசு நோக்க உரையாற்றினார்.
இந்த கருத்தரங்கில் கல்லூரி ஆராய்ச்சி புல முதன்மையர் எஸ்.பால்சாமி, கல்லூரி முதல்வர் ம.லட்சுமணசாமி, தமிழ்துறை உதவிப் பேராசிரியர் கு.முத்துக் குமார், பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரி பேராசிரியர்கள், சூழல் பாதுகாப்பு அமைப்பு ஆய்வாளர்கள், கருத்தாளர் கள் பங்கேற்றுள்ளனர்.



