fbpx
Homeபிற செய்திகள்வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் 130 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியேற்றும் விழா

வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் 130 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியேற்றும் விழா

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் 130 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் இந்தியாவின் கொடி அறக்கட்டளையின் உதவியுடன் அவா ஹில்வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், சிவில் நிர்வாகம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பள்ளிக் குழந்தைகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ராணுவப் பணி பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

மெட்ராஸ் ரெஜி மென்ட்டின் பாரம்பரியம் மற்றும் ஒழுக்கத்தின் கோட்டையாக அவா ஹில் விளங்குகிறது. இது அக்னிவீரர்களின் முக்கிய பயிற்சிப் பகுதியாகும்.

வெலிங்டன், அர்வங்காடு, குன்னூர் பள்ளத்தாக்கு முழுவதையும் கண்டு களிக்கும் வகையில், இந்தியக் கொடி உயரமாக நிற்கிறது. இது நமது தேசிய அடையாளத்தையும், தேசிய உணர்வையும் நினைவூட்டுவதாக வெலிங்டன் கன்டோன்மென்ட்நிர்வாகத்தினர் தெரிவித்துள் ளனர்.

படிக்க வேண்டும்

spot_img