பாரதியார் பிறந்த நாளை ஒட்டி, கோவை, நீலாம்பூரில் உள்ள கதிர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், பாரத மொழிகளின் திருவிழா நிகழ்வை ஒட்டி பாரதியார் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டியை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்த திட்டமிட்டது.
அதன்படி கோவை நீலாம்பூரில் உள்ள கதிர் கலை, அறிவியல் கல்லூரியில் “பாருக் குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல் லூரி நிறுவனத் தலைவர் இ.எஸ்.கதிர், லாவண்யா கதிர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லூரி முதல்வர் ஆர்.கற்பகம் தலைமை வகித்தார்.
போட்டியில் பல்வேறு துறை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் பி.காம் இரண்டாமாண்டு மாணவி, எம்.யோஷ்னா முதலிடம் பெற்று ரூ5. ஆயிரம் பரிசு, சான்றிதழ் பெற்றார். இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், சான்றிதழை பி.காம் இரண்டாமாண்டு மாணவர் இ.ரவிச்சந்திரனும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், சான்றிதழை பி.காம் 3-ம் ஆண்டு மாணவி என்.யோகேஸ்வரியும் பெற்றனர்.



