பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தன், பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் கே.கார்த்தி கேயன், கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை துணைத் தலைவர்கள் ஏ.கே.இளங்கோ, கார்த்திக் எம்.முருகேசன், சிறப்பு விருந்தினர் முனைவர் கே.பழனி, பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.செந்தில்குமார், தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் தினேஷ் குமார் ஆகியோர் சிறந்த மாணாக்கர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினர்.
விளையாட்டு விழா விற்கு கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலர் பி.பாலசுப்பிரமணியம், கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் இ.ஆர். கே.கிருஷ்ணன், இந்திய ரயில்வே துறையின் முன்னாள் கைப்பந்து விளையாட்டு வீரர் திருச்சி ஜெய்சங்கர் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.



