fbpx
Homeபிற செய்திகள்கொங்கு கலை- அறிவியல் கல்லூரியில் கொங்கு மங்கை விருது வழங்கும் விழா

கொங்கு கலை- அறிவியல் கல்லூரியில் கொங்கு மங்கை விருது வழங்கும் விழா

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் மகளிர் தின விழா, கொங்கு மங்கை விருது வழங்கும் விழா, நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் சச்சிதானந்தன், முதல்வர் வாசுதேவன் மகளிர் மேம்பாட்டு அமைப்பின் செயலாளர் பிரபா, துணைத்தலைவர் சங்கீதா, சிறப்பு விருந்தினர் ஜீவாலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் கலந்து கொண்டு உரை ஆற்றினர். பல்வேறு சாதனை பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மகளிர் தினவிழாவினை யொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மகளிர் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சர்மிளாதேவி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img