கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில்ஸ் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு- இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அருகில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை துணை இயக்குநர் கருணாகரன், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் வாசுகி ஆகியோர் உள்ளனர்.