கோவை டவுன்ஹாலில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இது குறித்து பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் (பொறுப்பு)ஆனந்தன் கூறியதாவது :-
இந்த சிறப்பு கண்காட்சி விற்பனை வருகிற 25 .10. 24 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் இந்த வருடம் புதிய வரவாக கோபிநாத் கிருஷ்ணன் நவகிரக செட், கந்தமாதா பழங்கால சிலைகள் மாதிரியான பொம்மைகள் உள்பட பல்வேறு கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியின் மூலம் ரூ.80 லட்சத்துக்கு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம்.
விற்பனை தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் மேற்கண்டவாறு அவர் கூறினார்.



