fbpx
Homeபிற செய்திகள்கோபனாரி, முள்ளி சோதனை சாவடிகளில் தமிழக - கேரள எல்லைகளில் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்

கோபனாரி, முள்ளி சோதனை சாவடிகளில் தமிழக – கேரள எல்லைகளில் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெங்களூரில் படித்து வந்த நிலையில் அண்மையில் சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து உறவினர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக பலியானார்.அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இளைஞர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரி ழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டி கோவை மாவட்டம் அமைந்துள்ளது. பணி நிமித்தமாகவும,மருத்துவ சிகிச்சைக ளுக்காகவும் இரு மாநிலத்தினரும் கோவைக்கும், கேரளாவிற்கும் சென்று வருகின்றனர். இதன் காரணமாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக – கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதார துறையினர் முகாமிட்டு சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன் ஒருபகுதியாக காரமடை அடுத்துள்ள கேரள எல்லைப்பகுதி களான கோபனாரி, முள்ளி சோதனை சாவடிகளில் வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர் மேற்பார்வையில் மருத்துவர் பிரவீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா மற்றும் இரு செவிலியர்கள், ஒரு மருந்தாளுநர் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அதில் கேரள மாநிலத்திலிருந்து காரமடை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.காய்ச்சல் இருந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர்களது டிராவல் ஹிஸ்டரி முழுவதுமாக கண்காணிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சுகாதார துறையினர் கூறுகையில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலமாக நேரடியாக மனிதர்களுக்கு பரவக்கூடிய தன்மை உடையது. அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், கழிவுகளாலும், அவை உண்டு விட்டு விட்டுச்சென்ற பழங்களை உண்பதாலும் நிபா வைரஸ் பரவுகிறது. பின்னர், வவ்வால்களால் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் வைரஸ் பரவி அங்கிருந்து மனிதர்களுக்கும் பரவும். மேலும்,இந்த வகை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந் தாலும் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் தற்போது வரை நிபா வைரஸால் பாதிப்பு ஏதுமில்லை இருந்தாலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக சுகாதாரத்துறை மூலம் கேரளா எல்லையோர பகுதி சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் முள்ளி, கோபனாரி சோதனைச்சாவடி களில் உள்ள மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வரும் மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்வர்.தொடர்ந்து அவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.

மேலும், அவர்களது பெயர், தொடர்பு எண் பெறப்பட்டு அவர் களை தினந்தோறும் தொடர்பு கொண்டு காய்ச்சல் உள்ளதா? அல்லது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற விவரங்கள் பெறப்படும்.
மேலும்,அவர்கள் சென்ற பகுதி சுகாதார மேற்பார்வையாளர் மூலம் அவரது டிராவல் ஹிஸ்டரி முழுவதுமாக ஆராயப்படும்.தற்போதைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வகையில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img