தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள இரவணசமுத்திரம் கிரா மத்தை சேர்ந்த மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக விளங்கும் சாதனை சகோதரிகளுக்கு சிங்கப்பெண், மற்றும் சாதனைச்சுடர் விருதுகளானது மதுரை யில் வைத்து நடைபெற்ற பல்வேறு துறை களில் சாதனை புரிந்தவர்களுக்கு சர்வதேச முத்தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்பட்டது.
மதுரை யாதவர் கல்லூரி, மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பெல்ஜியம் தமிழ்ச்சங்கம் ஆகியவை சார்பில் சர்வதேச முத்தமிழ் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தாய்லாந்து நாட்டில் 2016/2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய அள விலான யோகா போட்டிகளில் இருமுறை தங்கம் வென்ற 12 ஆம் வகுப்பு நிறைவு செய்த மிஸ்பா நூருல் ஹபிபாவிற்கு சிங்கப்பெண் விருதும், குற்றாலம் செய்யது பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் ஷாஜிதா ஜைனப்பிற்க்கு சாதனைச்சுடர் விருதும் சர்வதேச அளவில் வழங்கி கௌ ரவப்படுத்தியது.
இவ்விருவருக்கும் செய்யது பள்ளி நிர்வாகம் இவர்களது எளிய குடும்ப சூழல் அறிந்து திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம் இச்சகோதரிகளுக்கு கல்வி பயில இலவசம் வழங்கி உள்ளதால் மிஸ்பா 12 ஆம் வகுப்பு நிறைவு செய்தார். ஷாஜிதா 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்கள் கடையம் அருகே உள்ள இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகைகடை ஊழியர் முகம்மது நஸுருதீன்-ஜலிலா தம்பதிகளின் மகள்கள் ஆவர். விருது பெற்ற அக்கா, தங்கை யுனிவர்சல் அச்சுவர்ஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இடம் பிடித்தும் பல்துறை சார்ந்த அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பலவகையான விருதுகள், சாதனை சான்றிதழ்கள் வாங்கி குவித்து வைத்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து யோகா, ரோலர் ஸ்கேட்டிங்கில் பல சமூக விழிப்புணர் வுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மூத்த சகோதரி மிஸ்பா நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்போது இயற்கை மற்றும் யோகா இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பிற்கு (பி.என்.ஒய்.எஸ்) விண்ணப்பம் செய்துள்ளார். இப்படிப்பிற்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டி இம்மாண விகளின் யோகா, ஸ்கேட்டிங் விளை யாட்டு ஆசிரியர் குரு கண்ணன் கோரிக் கை வைத்துள்ளார்.
மேலும் இந்த சகோதரிகள் தமிழக அரசின் விருது , மத்திய அரசின் தேசிய விருது பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை, இதற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று விளையாட்டுத் துறை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



