தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை விபத்திலிருந்து தவிர்க்கும், எய்ம்ஸ் ஆனந்த் உருவாக்கிய எச்சரிக்கை கருவியின் அறிமுக விழா கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாகரன் அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் சுனில்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.