தி கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் இன்று வெளியாகின்ற நிலையில் அது தொடர்பாக தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கோவை மாவட்ட தலைவர் சார்புதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தி கேரளா ஸ்டோரிஸ் வெளியாவதை கண்டித்து தமுமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தி கேரளா ஸ்டோரிஸ் ட்ரெய்லரை பார்க்கின்ற போது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. நடைமுறையில் எங்களின் இந்து, கிறிஸ்தவ சகோதரர்களுடன் நாங்கள் பழகுவதற்கும் ட்ரெய்லரில் காட்டப்பட்டதற்கும் முற்றிலும் மாறாக உள்ளது. இவ்வாறு முஸ்லிம்களை எதிரிகளாக சித்தரிக்கும் புர்கா, கேரளா ஸ்டோரிஸ் போன்ற திரைப்படங்கள் ரமலான் மாதத்திலும் கூட நிறைய வந்து கொண்டிருக்கிறது.
முஸ்லிம்கள் கலாச்சாரத்திற்கும் இந்த திரைப்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் வரும் இது போன்ற படங்களுக்கு அரசு ஆதரவாக இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.



