கேரள மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகள் மற்றும் நகராட்சி திடக்கழிவுகளும் தமிழக எல்லைப்புற கிராமங்களில் கொட்டப்பட்டு வருவதை தடுப்பதற்கு, தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியமானது மாவட்ட நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத் தலைவர், கேரளா மாசுக்கட்டுபாடு வாரிய தலைவருக்கு, கேரளாவிலிருந்து எவ்வித கழிவுப் பொருட்களும் தமிழ்நாடு எல்லைக்குள் கொண்டு வரப்படாமல் இருக்க, கேரள அரசின் உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஆணை பிறப்பிக்க கடிதமும் எழுதி உள்ளார்.
சோதனை சாவடிகள்
காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலம் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகள் மூலம் கழிவு பொருட்கள் வருவது கண்காணிக்கப்படுகிறது. சட்டவி ரோதமாக அகற்றப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகள் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை பாழ்படுத்துகின்றன.
நோய்கள் பரவுதலை ஊக்கு விக்கிறது. கேரள மற்றும் பிற மாநிலங்களிலிருந்து சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகள் மற்றும் இதர திட க்ழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எல்லையோர கிராமங்களில் பயன்படாத விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து கழிவுகள் அகற்றப்படுவது அறியப்பட்டது. அவ்வாறு நிலங்களை குத்தகைக்கு விடுதல் சட்டப்படி குற்றமாகும். எனவே, நில உரிமையாளர்கள் மேற்படியான சட்ட விரோத செயல்களுக்கு நிலங்களை உப யோகப்படுத்த வேண்டாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள நில உரிமையாளர்கள் மேற்படி கழிவுகளை அந்த நிலங்களில் கொட்டுவதற்கு, குத்தகைக்கு விடுவதாக அறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் கேரளா விலிருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் திட கழிவுகள் கொட்டப்படுவது தெரிந்தால் பொதுமக்கள் / சமூக ஆர்வலர்கள் கீழ்காணும் தொலைபேசி எண்ணிற்கு புகார் அளிக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.
கோவை மாவட்ட ஆட்சியர், 0422 2301114 collrcbe@nic.in collrcbe@nic.in
கோவை மாவட்ட காவல் ஆணையாளர், 0422 2300250 cop.cbe.tncctns.gov.in
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கோவை வடக்கு) 0422 2444608, 2433826 eecbn@tnpcb.gov.in
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கோவை தெற்கு) 0422 2675608 deecbs@tnpcb.gov.in
பறக்கும் படை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் மாவட்டம் 0421-2241131 eefstpr@tnpcb.gov.in eefstpr@tnpcb.gov.in
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



