பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா திமுக பொதுக்கூட்டம் கோவை ராஜ வீதியில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.
திமுக பொருளாரும், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு சிறப்புரை ஆற்றினார். அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை உரை ஆற்றினார்.
அப்போது அமைச்சர் செந் தில்பாலாஜி பேசியதாவது:
கோவை என்று சொன்னால் அது திமுகவின் கோட்டை. நகர்புறத்தின் உள்ளாட்சி தேர்த லின் வெற்றியை அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம். கலைஞரைப் பிரதிபலிக்கும் விதமாக பேராசிரியர் பல்வேறு சாதனைகளை மேற்கொண் டுள்ளார். குறிப்பாக கல்வித்து றையில் நிறைய செய்துள்ளார்.
கடந்த அதிமுகவின் ஆட் சியால் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமையை திமுக ஆட்சி சரி செய்துள்ளது. கோவையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவிகிதம் சாலை பணிகள் நிறைவுபெற்றுள்ளது. விமான நிலையம் விரிவாக்கம் 92 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் போடமுடியாத சாலையை திமுக ஆட்சியில் போட்டுள்ளோம்.
மயிலாடுதுறையில் மழை காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்ட போது 2600 மின் மாற்றிகள் 36 மணி நேரத்தில் முதல்வரின் வழிகாட்டுதலில் சீரமைக்கப்பட்டது.
இந்தியா டூடே பத்திரிக்கை
24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைப்பவர் முதல்வர்.
இந்தியா டூடே பத்திரிக்கை ஆய்வின் படி பல்வேறு துறைகளில் தமிழகம் முதல் இடம். முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக நம் முதல்வர் உள்ளார்.
அன்னூர் தொழிற் பூங்காவிற்காக விவசாயிகளின் அனுமதி இல்லாமல் கண்டிப் பாக அவர்களது நிலம் எடுக்கப்படாது. சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தனிநபர், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் நிலம் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் டி.ஆர்.பாலு பேசியதாவது:
தலைவர் கலைஞர் அப்போதைய பொதுச்செயலாளர் பேராசிரியர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.
பொதுச் செயலாளர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாரோ அதே அன்பு தொண்டர்கள் மீதும் வைத்திருந்தார். கலைஞர் போலவே முதல்வர் ஸ்டாலினும் அன்பு வைத்துள்ளார்.
பேராசிரியர் அவர்கள் 80 ஆண்டுகால பொதுச்சேவையில் இருந் துள்ளார். 40 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக இருந் தவர். பேராசிரியர் துக்கத்தை வெளிகாட்ட கண்ணீர் விட மாட்டார்.
பேராசிரியரும் கலைஞரும் பாசமும் நேசமும் பொழிந்தவர்கள். இருவரது நட்பு 74 ஆண்டுகால நட்பு. லைவர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவை ஒப்படைக்க வேண்டும் என முதலில் சொன்னது பேர £சிரியர் அன்பழகன் தான். திமுகவை முதல்வர் மு.க. ஸ்டா லின் வழிநடத்த வேண்டும் அதை நான் பார்க்க வேண்டும் என சொன்னார் பேராசிரியர். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் திமுக மாநகர் மாவட்ட செயலாளருமான நா. கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, கண்ணப்பன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மார்க்கெட் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.



