Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கேபிஆர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி “அகாடமியா நெக்ஸ்ட்” என்ற முயற்சியின் கீழ் ஸ்கூல் ஆஃப் டிசைன் திங்கிங் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன் மூலம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி கல்லூரி மாணவர்களின் சிந்தனைத்திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தலைமை பண்புகள், நிர்வகிக்கும் திறன் மற்றும் திட்டமிடல் திறன் களை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த கூட்டமைப்பு தொடர்ச்சியான பயிற்சி அமர்வுகள், பயிற்சிப் பட்டறைகள், மற்றும் தொழிற்நுட்ப சவால்களைத் தீர்ப்பதற்கான அணுகு முறைகளை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஊடாடும் தொகுதிகளை அறிமுகப்படுத்தும்.

“பொறியியலில், நாம் கணக்கீடு மற்றும் தர்க்க ரீதியான சிந்தனையில் கவனம் செலுத்துகிறோம். இருப்பினும், வடிவமைப்பு சிந்தனையை இணைத்துக் கொள்வது, தொழில்நுட்பச் சவால்களின் தேவைகள் மற்றும் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு மிகவும் பயனுள்ள தீர்வுகளை வழங்க உதவும்“ என்று கல்லூரியின் முதல்வர் முனைவர் த சரவணன் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img