ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை மேம்பட்ட மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சைகளுக்காக நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனத்தை சென்னையில் முதன்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது.
இஸ்ரோ அமைப்பின் தலைவர் டாக்டர்.நாராயணன், காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அறுவை சிகிச்சை சாதனத்தை தொடங்கி வைத்தார்.
இதில், சென்னை காவேரி மருத்துவமனையின் மூளை & முதுகுத்தண்டிற்கான அறுவைசிகிச்சை தலைமை நிபுணர் டாக்டர். ரங்கநாதன் ஜோதி பேசுகையில், “சிக்கலான முதுகுத்தண்டு ஊனத்தை சரிசெய்தல், புற்றுக்கட்டிகளை வெட்டி அகற்றுதல் மற்றும் மிக குறைவான ஊடுருவலுள்ள செயல்முறைகள் ஆகியவற்றை இந்த சாதனத்தின் மூலம் அதிக துல்லியத்தோடும், நம்பிக்கையுடனும் இப்போது செய்ய முடியும்” என்றார்.
காவேரி மையத்தின் இயக்குநர் டாக்டர். கிரிஷ் ஶ்ரீதர் பேசுகையில், “நிகழ் நேரத்திலேயே அறுவைசிகிச்சையை அகக்கண்வழியாக காண உதவுகிறது” என்றார்.
நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஷியாம் சுந்தர் கூறுகையில்,
“நிகரற்ற துல்லியத்துடன் அறுவைசிகிச்சையை நாங்கள் செய்வதற்கு கூடுதல் திறனை வழங்குகிறது” என்றார்.
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். பாலமுரளி கூறுகையில்,
“இந்நாட்டில் வெகு சில மையங்களே இந்த O-ARM சாதனத்தைக் கொண்டிருக்கும் நிலையில் இதனை சென்னையில் அறிமுகப்படுத்தும் முதல் மருத்துவமனை” என்றார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில்,
“சென்னையில் அதிக பாதுகாப்பான, அதி நவீன சிகிச்சை பராமரிப்பு எமது நோயாளிகள் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்” என்றார்.