fbpx
Homeபிற செய்திகள்அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு,அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கரூர் கோட்ட செயலாளர் கருணாநிதி தலைமையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் என். சி.ஏ.பேரவை தலைமை ஆலோசனை குழு பொறுப்பாளர் முத்துசாமி, முன்னாள் மாநில செயலாளர் ஜான் பிரிட்டோ உள்ளிட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மூத்த ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு 12, 24, 36, வருட மூன்று கட்ட ஊதிய உயர்வு வழங்க வேண்டும், குரூப் இன்சூரன்ஸ் தொகையை 5- லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், பென்ஷன் வழங்க வேண்டும், எட்ட இயலாத அளவிற்கு அறிவியல் பூர்வமற்ற இலக்குகள் வழங்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

படிக்க வேண்டும்

spot_img