Homeபிற செய்திகள்மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, குருணை குளத்து அரசு மேல்நிலைப்பள்ளி, தரகம்பட்டி அரசு மாதிரி பள்ளி, தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலயில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், பெரிய கருப்பன், முருகவள்ளி, ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, இந்த பள்ளிகளில் பயிலும் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img