fbpx
Homeபிற செய்திகள்கரூரில் மாரத்தான் போட்டி - மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கிவைத்தார்

கரூரில் மாரத்தான் போட்டி – மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கிவைத்தார்

கரூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் போட்டி யினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேசிய தாவது:
தமிழக முதலமைச்சர் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியும்.

மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 என்பது தகவல்களை பெறுவதற்கு மட்டுமல்ல, மக்களின் குறைகளை களைவதற்கு ஒரு நுழைவாயிலாக அமைகிறது என்பதை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் மராத்தான் போட்டி நடத்த உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கரூரில் நடைபெற்ற இப்போட்டிகளில் 288 நபர்கள் கலந்து கொண்டார்கள். 17 முதல் 25 வயதிற்குபட்டவர் கள் பிரிவில் ஆண்கள் – 8 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் – 10 கி.மீ. துரமும், 17 முதல் 25 வயதிற்குபட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் – 5 கி.மீ. துரமும் , மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கி கரூர்- திண்டுக்கல் நெடுஞ்சாலை வழி யாக மாவட்ட ஆட்சியரகம், வெஙகல்பட்டி பாலம் ரவுண்டனா வரை சென்று மிண்டும் மாவட்ட விளையாட்டு மைதானம் வந்த டையும் வகையில் போட்டி அமைக்கப்பட்டது.

இதேபோல, ஆண்கள் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்க ளுக்கு 8 கி.மீ மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10கி.மீ தூரம் இலக்கு வைத்து இரு பிரிவுகளும், பெண்களுக்கான 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான நடைபெற்ற 5 கி.மீ ஆகிய இரு பிரிவுகளிலும் நடைபெற்ற மராத்தான் போட்டிகளில் முதலிடம் பெற்ற வீரர் வீராங்கனை களுக்கு தலா ரூ-5000 வீதம் 4 நபர்களுக்கும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ-3000 வீதம் 4 நபர்களுக்கும், மூன்றாமிடம் பெற்ற 4 நபர்களுக்கு ரூ-2000 வீதம் நான்காமிடம் முதல் பத்தாமிடம் வரை பெற்றவர்களுக்கு ரூ- 1000 வீதம் 28 நபர்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்-. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர்.உமாசங்கர், தடகள பயிற்றுநர் சபரிநாதன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன், உடற்கல்வி ஆசிரியர்கள் மகாமுனி, சதிஸ், மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img