Homeபிற செய்திகள்சர்வதேச டென்னிஸ் போட்டியில் 2 தங்கம்: பரணி வித்யாலயா யாழினி அபார சாதனை

சர்வதேச டென்னிஸ் போட்டியில் 2 தங்கம்: பரணி வித்யாலயா யாழினி அபார சாதனை

சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா யாழினி 2 தங்கப் பதக்கங்கள் வென்று அபார சாதனை புரிந்தார்.

அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா யாழினி 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியா சார்பாக பங்கு பெற்று இரட்டையர் பிரிவில் 1 தங்கப் பதக்கமும், தனி நபர் பிரிவில் 1 தங்கப் பதக்கமும் என மொத்தமாக 2 தங்கப் பதக்கங்கள் வென்று அபார சாதனை படைத்துள்ளார்.

அண்மையில் பரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாநில சாரணர் தலைமை பயிற்சியாளர்களுக்கான கருத்தரங் கில் சர்வதேச அளவில் சாதனை படைத்து இந்தியாவிற்கும் தமி ழகத்திற்கும் பெருமை சேர்த்த யாழினி பாராட்டப்பட்டார்.

இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மற்றும் பாரத சாரணர் இயக்கத்தின் மாநில செயலர் முனைவர் நரேஷ் சர்வதேச சாதனை மாணவியைப் பாராட்டி பதக்கமும் கேடயமும் பரிசளித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாநில நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், அலமேலு, சண்முகவேல், ஸ்ரீநிவாசன், முத்தமிழ் பாண்டியன், சக்திவேல், நாகராஜன், அருள்மேரி, கோமதி ஆகியோர் சர்வதேச சாதனை மாணவியை பாராட்டி வாழ்த்தினர்.

இந்நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் மற்றும் பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் ஷி.மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங் காவலர் வி.சுபாஷினி முன்னிலை வகித்தனர்.

பரணிக் கல்விக் குழும முதன்மை முதல்வர் மற்றும் மாநில சாரண உதவி ஆணையர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர் s.சுதாதேவி, பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் R.பிரியா மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் சாதனை மாணவி யாழினியை பாராட்டி வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img