fbpx
Homeபிற செய்திகள்10, 11, 12ம் வகுப்பில் கரூர் பரணி பார்க் பள்ளி சாதனை

10, 11, 12ம் வகுப்பில் கரூர் பரணி பார்க் பள்ளி சாதனை

அண்மையில் வெளியான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கரூர் பரணி பார்க் பள்ளி அபார சாதனை புரிந்துள்ளது. மேல்நிலை 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தாணுமாலயன் 590 மதிப்பெண் பெற்று கலை பாடப்பிரிவில் கரூர் மாவட்ட முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனா 588 மதிப்பெண் பெற்று கரூர் மாவட்ட மூன்றாமிடம் பெற்றுள்ளார். இலக்கியா 585 மதிப்பெண்ணும், அர்ச்சனா 585 மதிப்பெண்ணும் பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர்.


மேலும் கணிதத்தில் 1 மாணவரும், கணினி அறிவியலில் 2 மாணவ ர்களும், கணக்குப் பதிவிய லில் 1 மாணவரும், பொருளியலில் 1 மாணவரும், வணிகக் கணிதத்தில் 1 மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 590 மதிப்பெண்களுக்கு மேல் 1 மாணவரும், 580 மதிப் பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 81 மாணவர்களும் பெற்றுள்ளனர்.


12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தனஸ்ரீ 593, தாரணி 591, ஜெயஸ்ரீ 591, பிரணவ் ஸ்ரீநிதி 589 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் கார்த்தீபன் நான்கு பாடங்களில் 100/100 மதிப்பெண்களும், அண்ணா பல்கலைக் கழக இன்ஜினியரிங்க் கட் ஆப் 200/200 பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று அபார சாதனை படைத்துள்ளார்.

மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 76 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 177 மாணவர்களும் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 19 மாணவர்களும், கணிதத்தில் 4 மாணவர்களும், இயற்பிய லில் 1 மாணவரும், வேதியியலில் 3 மாணவர்களும், கணினி பயன்பாட்டுயியலில் 3 மாணவர்களும், கணக்குப்பதிவியியலில் 7 மாண வர்களும், வணிகவிய லில் 3 மாணவர்களும், பொருளியலில் 4 மாணவர்களும், ஆங்கிலத்தில் 1 மாணவரும் மொத்தம் 45 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 19 மாணவர்கள் 480க்கு மேல் பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர். இலக்கியா 492 மதிப் பெண்ணும், ஹர்ஷினி 490 மதிப்பெண்ணும், புகழ் ஹர்ஷினி 490 மதிப்பெண்ணும், ஸ்ரீமதி 489 மதிப்பெண்ணும், அபிநயா 489 மதிப்பெண்ணும் பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர்.


மேலும் கணித்ததில் 5 மாணவர்களும், அறிவியலில் 3 மாணவர்களும், சமூக அறிவியலில் 1 மாணவரும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்களும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 42 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 77 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 149 மாணவர்களும் பெற்றுள்ளனர்.


பரணி பார்க் பள்ளியில் பொதுத்தேர்விற்கான பயிற்சியோடு சேர்த்து ஆந்திர ஆசிரியர்களைக் கொண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ சிறப்புப் பயிற்சியும் வழங்கப்ப டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கும் அவர் களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பரணிபார்க் கல்விக்குழுமத் தின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன், பள்ளியின் முதல்வர் சேகர், துணை முதல்வர் நவீன்குமார், மேல்நிலை ஒருங்கிணைப்பாளர்கள் பானுப்பிரியா, கணேசன் மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.


இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகன ரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொன்னாடையும் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img