fbpx
Homeபிற செய்திகள்சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை சென்னை இராணி மேரி கல்லூரியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி முதல்வர் டாக்டர் கே.பி. கணேசன், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், பொதுப் பணித்துறை திருநெல்வேலி (தொழில்நுட்பம்) உதவிப் பொறியாளர் சரத்குமார், உதவி மின்பொறியாளர் ரஸீன் அகமது, சுரண்டை காய்கனி மார்கெட் சங்க தலைவர் ஏ.கே.எஸ் சேர்ம செல்வம் மற்றும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img