நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சேசசாயி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் குமாரபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வாகன ஓட்டுனர்களுக் கான இலவச பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமினை குமாரபாளையம் வாகன தணிக்கை ஆய்வாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார்.
இதில் வாகன ஓட்டுனர்களுக்கு ரத்த அழுத்தம் ,நுரையீரல் செயல்பாடு ,எலும்பு வலிமை ,கண் பார்வை குறைபாடு, தீராத தலை வலி, மாறு கண் பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.
இந்த நிகழ்விற்கு இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சங்கத்தின் மாநில தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். ஓட்டுனர் களுக்கான சங்கத்தின் மாநில செயலாளர் அசோக்குமார் மண்டல தலைவர் முரளி, மாவட்ட தலைவர்கள் சிவக்குமார், நெடுஞ்செழியன் ஒன்றிய பொறுப்பாளர் பெத்ராஜ், மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் பல்வேறு வாகன ஓட்டுனர்கள்,அரசு அதிகாரிகள் என
ஏராளமானோர் இந்த முகாமில் பங்கேற்றனர்.