fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் ஏர் ரைபிள் அகாடமியின் ஸ்கில் வெஞ்சர் 2025 துப்பாக்கி சுடும் பயிற்சி

கேபிஆர் ஏர் ரைபிள் அகாடமியின் ஸ்கில் வெஞ்சர் 2025 துப்பாக்கி சுடும் பயிற்சி

கோயம்புத்தூர் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் ஏர் ரைபிள் அகாடமியின் சார்பில், இளம் தலைமுறையினரின் துப்பாக்கிச் சுடுதல் திறனை ஊக்குவித்துச் சாதனையாளராக உருவாக்கும் நோக்கில் “ஸ்கில் வெஞ்சர் 2025” என்ற நிகழ்வானது 26.02.2025 முதல் 02.03. 2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது. 

தொடர்ந்து நிகழ்வின் பாராட்டு விழாவானது கடந்த 3ம் தேதி  நடந்தது. இந்நிகழ்வினைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.கீதா தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் நான்காவது பட்டாலியனின் கமாண்டிங் ஆபிசர் லெப்டினன்ட் கர்னல் லால்ரெம்ரூட்டா ஓய்னெம்  கலந்து கொண்டு இளம் வயதில் எண்ணும் எண்ணங்களுடன் முயற்சியைத் துணையாக்கி முன்னேறினால் வெற்றி நிச்சயம் என ஊக்குவித்து பேசினார். 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட  ஐந்து நாள் நிகழ்வில் 28 பள்ளிகளிலிருந்து 440 மாணவர்களும், 47 கல்லூரிகளிலிருந்து 517 மாணவர்களும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வின் இறுதி இரண்டு நாட்கள் என் ஆர் மற்றும் ஐஎஸ்எஸ்எப் போட்டிகளும் சேர்க்கப்பட்டு, அவ்விருநாள் போட்டிகளில் அனுபவமிக்க 105 திறன்மிகு துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் கலந்து கொண்டு தம் திறனை வெளிப்படுத்தினர். 

இச்சிறப்பான நிகழ்வினை ஏர் ரைபிள் அகாடமியின் பயிற்றுநர்கள் எஸ்.ஸ்ரீதர் மற்றும் எ.சதீஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img