கடந்த 1ம் தேதி (ஞாயிறு) கோவா கலங் குட் டெகாத்லான் மை தானத்தில் கராத்தே போட்டி மற்றும் எ.பி.ஜே உலக சாதனை போட்டி நடைபெற்றது. அதில் கோவையை சேர்ந்த 16க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில பிரத்விக்,ஆதிக் அருண் பிரகாஷ் ,கௌதம் கிருஷ்ணா,ஆலன் ஸ்மித் ஆகியோர் 20 நிமிடம் எ.பி.ஜே உலக சாதனை படைத்தனர். அதேபோல 40 நிமிடம் உலக சாத னையை ஹரிணி, ஓவியா, பூபதி, மதன் குமார், மனோஜ் குமார், சுஜேந்திரர் ஆகியோர் நிகழ்த்தினர்.
மற்றும் தேசிய அளவிலான கராத்தேப் போட்டியில் முதல் இடத்தை பரணிதரன், தர்ஷன், பிருந்தா ஸ்ரீ, நிரஞ்சன், சஞ்சய் குமார், ஆகாஷ் ஆகியோர் பெற்றனர்.
விழாவில் கோவை மாணவ, மாணவிகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எ.பி.ஜே உலக சாதனையின் நிறுவனர் மற்றும் தலைவரான அஜித்குமார் மற்றும் முதன்மை பயிற்சியாளரான ப.செந்தில் குமார் ஆகியோர் பரிசளித்து பாராட்டினர்.