தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், சாமிசெட்டிப் பட்டி ஊராட்சி, சாமி செட்டிப்பட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மற்றும் சத்து உப்பு போன்றவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் மணிமாறன், மருத்துவர்கள், பாமக ஒன்றிய செயலாளர் வ.அறிவு, கால்நடை வளர்ப்போர் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.