fbpx
Homeபிற செய்திகள்காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வழியாக குன்னூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று மாலை சென்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழியில் இருந்த காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தகவல் ஏதுமின்றி திடீரென உள்ளே வந்த அமைச்சர் ஆரம்ப சுகாதார வளாகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் வார்டு களுக்கும் நேரடியாக சென்று மருத் துவர்கள் பணியில் உள்ளனரா, நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்தினார்.

அப்போது சித்தா மருத்துவர் பணியில் இல்லாமல் இருந்த நிலை யில் அது குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பினார். அவர் விடுப்பில் இருப்பதாக அமைச்சரிடம் தலைமை மருத்துவர் தெரிவித்த போது அதற் கான ஆவணத்தை கேட்டார்.

இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் செவிலியர் தங்கும் விடுதி மற்றும் இதர கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த போது பணிகள் துவங்கி நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை கட்டுமான பணிகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளது குறித்து தெரிந்து கொண்டு தொடர்புடைய அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக அழைத்த அமைச்சர், முறையாக பணிகள் மேற்கொள்ளாத நபருக்கு ஏன் இரண்டு கட்டுமான கான்டிராக்ட் வழங்கி அனுமதி அளித்தீர்கள்? கடைசியாக எப்போது இங்கு வந்து நேரில் பணிகளை ஆய்வு செய்தீர்கள்? என அடுக்கடுக்கான கேள்வி கேட்ட அமைச்சர் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேசி பணியில் சுணக்கம் காட்டும் பழைய ஒப்பந்ததாரரை விடுவித்து விட்டு புதிய நபர்களிடம் பணியினை வழங்கி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.. அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தின் விரிவாக்க பணிகள் விரைவுபடுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img