கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில், தோவாளை மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் செய்தியாளர் பயண த்தின்போது பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தோவாளை வட்டார த்தில் பீமநகரி ஊராட்சியில் கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்படுவது பார்வையிடப்பட்டது.
முள்வேலி அமைத்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்விரிவாக்க மையம் மூலம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சகாயநகர், திருப்பதிசாரம், பீமநகரி ஊராட்சி பகுதிகளை சார்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
திருப்பதிசாரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் 31.6 ஹெக்டேரில் பயிரிட ப்பட்ட விதைப்பண்ணை மற்றும் விதைசுத்திகரிப்பு நிலையத்தினை பார்வை யிட்டு, விதை சுத்திகரிப்பு செய்யும் பணியின் பல்வேறு நிலைகளையும் சான்றட்டை பொருத்தப்பட்ட விதை மூட்டைகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்விதைகள் மாவட்டத்தில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் அனுப்பப்பட்டு விநியோகம் செய்யப்படுவது குறித்து கேட்டறியப்பட்டது.
திருப்பதிசாரம் கிராமம் லலிதா பண்ணையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் 2021-22-ன்கீழ் ரூ.2.36 லட்சம் மதிப்பில் வேளாண்மை மதிப்புகூட்டு இயந்திரமான மரச்செக்கு கருவியினை ரூ.94,683 மானியத்தில் நிறுவப்பட்டதையும், இயந்திரத்தின் மூலம் தேங்காய், நிலக்கடலை, எள் ஆகியவற்றிலிருந்து எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேளாண் பொருட்கள் உற்பத்திக்குழு
நாவல்காடு கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பழனி மூலம் அமைக்கப்பட்ட துளசி அங்கக வேளாண் பொருட்கள் உற்பத்திக்குழு தயாரிப்பு மையம் பார்வையிடப்பட்டது. அதற்காக ஒரு லட்சம் ரூபாய் மானியத்திற்கான செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அங்கு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, மீனமிலம், வேப்பங்கொட்டை கரைசல், மண்புழு உரம், தேமோகரைசல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தோவாளை வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மாநில வேளாண்மை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் நாவல்காடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை மற்றும் சந்திரனுக்கு ரூ.813 மானியத்தில் தார்பாலினும், ஐயப்பன் என்ற விவசாயிக்கு 10 கிலோ சிங்க் சல்பேட் ரூ.250 மானியத்திலும் வழங்கப்பட்டது.
நாவல்காடு கிராமத்தில் பரமசிவனுக்கு இயந்திரங்கள் வாடகை சேவை மையம் அமைப்பதற்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம், டிராக்டர் மற்றும் ரோட்டோவேட்டர் வழங்கப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இயந்திரங்களை அப்பகுதி விவசாயிகள் வாடகைக்கு வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் பரமசிவம் வயலில் ரூ.2,65,885 மதிப்பில் 70 சதவீத மானியத்தில் நிறுவப்பட்ட 5பிறி கிசி சோலார் பம்புசெட் மூலம் அப்பகுதியில் நெல் மற்றும் உளுந்து சாகுபடி செய்து வருகிறார்.
தோட்டக்க லைத் துறையின் சார்பில், வேம்பனூர் கிராமத்தில் சிறுமணி தோட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2022-23-ன்கீழ் நல்லமிளகு சாகுபடிக்கு ரூ.20000 மானியம் வழங்கப்பட்டது குறித்தும், அவரது தோட்டத்தில் தோட்டக் கலைத் துறை மூலம் வழங்கப்பட்ட கோகோ பயிர் மற்றும் சொட்டுநீர் பாசனத்தையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
செய்தியாளர் பயணத்தின்போது வேளா ண்மை இணை இயக்குநர் ஹனிஜாய்சுஜாதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எஸ்.கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மைப் பொறியியல் துறை செயற் பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, விதைச்ச £ன்று உதவி இயக்குநர் ஷீபா, வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஜோஸ், சுரேஷ் மற்றும் பண்ணை மேலாளர்(பொ) சூரிய பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.