fbpx
Homeபிற செய்திகள்ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை, துப்புரவு வசதிகளை கட்டித்தரும் ‘கைடுஹவுஸ்’

ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை, துப்புரவு வசதிகளை கட்டித்தரும் ‘கைடுஹவுஸ்’

பொதுத்துறை நிறுவனங் களுக்கும், வர்த்தகத்துறை வாடிக் கையாளர்களுக்கும் ஆலோசனை மற்றும் நிர்வகிக்கப்படும் சேவை களை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக செயலாற்றிவரும் ‘கைடுஹவுஸ்’, சென்னை நங்க நல்லூரில் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக கழிப்பறைகள் உட்பட துப்புரவு வசதிகளை கட்டித்தரும் திட்டத்தை செயல் படுத்த உள்ளது.

இத்திட்டத்திற்கு ரூ.12 லட்சம் என்ற ஆரம்பகட்ட தொகையை கைடுஹவுஸ் நிறுவனம் ஒதுக்கீடு செய்திருக்கிறது.
அரசுசாரா தொண்டு நிறுவன பார்ட்னரான ‘பூமி’ என்ற அமைப்பின் உதவியோடு, 2023 மார்ச் மாதத்திற்குள் பள்ளியில் 6 கழிப்பறைகள் கட்டித்தரும் பணியை ‘கைடுஹவுஸ்’ நிறைவு செய்யும். துப்புரவுக்கான கழிப்பறை வசதிகளை கட்டித்தருவது தவிர, இப்பள்ளியில் பிற முக்கியமான புதுப்பிப்பு பணிகளையும் ‘கைடு ஹவுஸ்’ நிறுவனம் மேற்கொண்டு செயல்படுத்தியிருக்கிறது.

பள்ளியில் கழிப்பறைகள் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் கைடுஹவுசின் தலைமை இயக்க அதிகாரி (COO)சார்ஸ் பியர்ட் பங்கேற்றார். இப்பள்ளியில் பயிலும் மாணவி களோடும் சார்ஸ் கலந்துரை யாடினார்.
‘உங்கள் மீதே உறுதியான நம்பிக்கை கொண்டிருங்கள்.

நம்பவியலாத பல விஷயங்களை உங்களால் செய்ய முடியும். பெரிய கனவுகளையும், லட்சியங்களையும் அனைவரும் கொண்டிருக்க வேண் டுமென்று நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்’ என்றார் சார்ஸ் பியர்ட்.

‘கைடுஹவுஸ்’ இந்தியா நிறுவனத்தின் இந்நாட்டு செயல் பாடுகளுக்கான தலைவர் மகேந் திர சிங் ராவத் பேசுகையில், “பள்ளிகளில் பெண் குழந்தைகள் / மாணவிகளது இடைநிற்றல் விகிதத்தைக் குறைக்கவும், பள்ளியில் சேரும் விகித்த்தை அதிகரிக்க வேண்டுமென்பதே கைடுஹவுஸின் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் நோக்கமாகும்” என்றார்.

‘கைடுஹவுஸ்’ நிறுவனத்தின் நிறுவன சமூகப் பொறுப்புறுதி (CSR) குழுவான ‘காருண்யா’, 2023 – ன் தொடக்கத்தில் இச்செயல் திட்டத்தை தொடங்கியது. தொடக்கத்திலிருந்து முடிவு வரை இதை சிறப்பாக செயல்ப டுத்துவதற்காக ‘பூமி’ தொண்டு அமைப்பின் உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கும் ஒரு சிறப்பு பணிக்குழுவை இதற்காக அது நிறுவியது.

சென்னையிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு தேவைகளை ஆராய்ந்து கண்டறியவும் மற்றும் தேவைப்பாடுகளை பரிசீலித்த பிறகு செயல்திட்டங்களை மேற் கொள்ளவும் ‘கைடுஹவுஸ்’ தீவிர முனைப்பும், ஆர்வமும் கொண் டிருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img