கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையின்கீழ் ரூ.6.76 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேற்று (ஜூலை 11) ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தோவாளை வட்டத்திற்குட்பட்ட தோவாளை – தாழக்குடி சாலை ரூ.3.87 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பாலப்பணிகளும், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட மருங்கூர் சாலை பகுதியில் நபார்டுதிட்டத்தின்கீழ் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் சிறு பாலப்பணிகளும், அழகியபாண்டிபுரம் ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பணிகளும், சித்திரங்கோடு – சுருளோடு சாலை காயக்கரை பகுதியில் மத்திய சாலை நிதி திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பாலப்பணிகளும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குளச்சல் – திருவட்டார் சாலை வேர்கிளம்பி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மீட்புப்பணிகள் திட்டத்தின்கீழ் ரூ.1.22 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் சாலை அகலப்படுத்தும் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மாவட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன், அரசு ஒப்பந்ததாரர் காட்சன், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.