திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட் பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆட்சியர் கூறியதாவது:
திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட் பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு பணிகளை விரைந்து முடித்து குடியிருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணி யங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021 -22 இன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணிகளை ஆய்வு செய்யப்பட்டது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டதோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022 -23-ன்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகளை ஆய்வு செய்யப்பட்டது.
மேல்புறம் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிரதான் மந் திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை – ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம் ஆய்வு செய்யப்பட்டது.
புலியூர்ச்சாலை ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரு.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, ஊராட்சி மன்றத்தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.