திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூரில் 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரி (KIT) (முன்னர் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி), ஈரோடு பில்டர் கல்வி அறக்கட்டளையின் (EBET) கீழ் இயங்கும் ஒரு முதன்மையான கல்வி நிறுவனமாகும். 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகம், கிராமப்புற இளைஞர் களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது.

நிர்வாகம்:
இக்கல்லூரியின் தாளாளர் எஸ்.ஆனந்தவடிவேல், முதல்வர் டாக்டர் எஸ்.ராம்குமார். மருந்தியல், கலை மற்றும் அறிவியல், காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆப் காமர்ஸ் கல்லூரிகளுடன், விரைவில் நர்சிங் மற்றும் விமானப் போக்குவரத்து கல்லூரிகளையும் உருவாக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பாடப்பிரிவுகள்:
இளங்கலை (B.E./B.TECH): கணினி அறிவியல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, மின் மற்றும் மின்னணு, இயந்திரவியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) – தரவு அறிவியல், AI – இயந்திர கற்றல், மற்றும் சைபர் பாதுகாப்பு.
முதுகலை (M.E./MBA): வணிக மேலாண்மை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகள்.
சிறப்பம்சங்கள்:
‘ஆராய்ச்சிக்கு முதலிடம்‘ என்ற கொள்கையுடன், அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி மையங்கள் மற்றும் AICTE IDEA Lab ஆகியவை இங்குள்ளன. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இது பெரிதும் உதவுகிறது. பிரம்மாண்டமான நூலகம், அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விரிவான விளையாட்டு வசதிகள் இங்கு உண்டு.

வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை:
2024-25 கல்வியாண்டில் 98.6% வேலைவாய்ப்பை எட்டியுள்ள இக்கல்லூரி, முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. கல்வித் திறனில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குத் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகைகளையும் நிர்வாகம் வழங்கி வருகிறது.
சேர்க்கை மற்றும் நிகழ்வுகள்:
மாணவர்கள் TNEA கலந்தாய்வு அல்லது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இணையலாம். சைபர் பாதுகாப்பு மற்றும் AI சார்ந்த தொழில்நுட்பங்களுக்கான மாநாடுகள் மற்றும் மாதந்தோறும் ‘Innovation Sprints’ போன்ற புத்தாக்கப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் கல்லூரி வளாகத்தையோ அல்லது இணையதளத்தையோ தொடர்பு கொள்ளலாம்.



