காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தவும், கல்விக் கண் திறந்த காமராஜர் குறித்து அறிந்து கொள்வதற்கும் காமராஜர் குறித்த தகவல்கள் அடங்கிய நாளிதழ்களை வழங்கப்பட்டது.
நேரு நகர் அரசு நடுநிலைப்பள்ளி, விளாங்குறிச்சி ஆர்.ஜே.மெட்ரிக் பள்ளி, ராமானுஜம் நகர் காந்தி நூற்றாண்டு பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கும் நாளிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
லயன்ஸ் மாவட்ட ஆளுநர் நித்தியானந்தம் ஆலோசனையின் பேரில் மண்டல தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நேரு நகர் லயன்ஸ் சங்க தலைவர் கனலி என்கிற சுப்பு மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மாரி செல்வி, உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், நேரு நகர் லயன்ஸ் சங்க செயலாளர் ரேவதி, ஆக்டிவ் செயலாளர் கீதா, பொருளாளர் திவ்யதர்ஷினி, பொருளாளர் (திட்டம்) தேஜஸ்வினி, முன்னாள் தலைவர்கள் லோகநாதன், நந்தகுமார், ஹரிஷ், வட்டாரத் தலைவர் மோகன்ராஜ், பால்ராஜ், சந்திரசேகர், கிரீஷ் கலந்து கொண்டனர்.



