திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று கலசபாக்கம் வட்டம், மோட்டூர் பகுதியில் ரூ.1 கோடியே 2 இலட்சம் மதிப் பீட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு போக்குவரத்து டயர் புதுப்பித்தல் பிரிவை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினார் பெ.சு.தி. சரவணன் முன்னிலை வகித்தார்.
இந்த பிரிவில் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பேருத்துகளின் டயர்கள் புதுப்பித்து பழுது பார்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் போளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆதமங்கலம் புதூர் வழியாக பட்டியந்தல் வரை மகளிர் விடியல் பேருந்தையும் புறநகர் பேருத்தையும் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்ப கராஜ் கலந்து கொண்டு பேசுகையில், `இந்த டயர் புதுப்பித்தல் பிரிவு, நமது மாவட்டத்தின் மேம்பாட்டிற்கும் நிர்வாக செயல்திறனுக்கும் மிக உறுதுணையாக இருக்கும். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தாய்ப்பு திட்டமான விடியல் பயணம் வாயிலாக மாதம் ஒன்றிற்கு 24 லட்சத்து 29 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை மிக சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது` என்றார்.



