fbpx
Homeபிற செய்திகள்கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கோஜிரியோ கராத்தே பயிற்சி பள்ளி மற்றும் வீரு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி புவனகிரி அருணாச்சலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில் பரங்கிப்பேட்டை பாபா வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பாபா பிரைமரி பள்ளி மாணவன் பி.ஜீவிதன், எஸ்.பவிஷ், எம்.முஹம்மது ஜமீல், எஸ்.கமலேஷ்வரன், எ.அஸ்லாம், பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.கவியரசன் ஆகிய மாணவர்கள் சண்டை பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.

கட்டா பிரிவில் எஸ்.ஸ்ரீ கார்த்திக், எ.முகமது ஆக்கில், பி.நிஷோக் ஆகிய மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் நிறுவனர் சண்முகம், தாளாளர் வைரமணி சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, ஆசிரியை சந்தோஷ் குமாரி, ராஜேஸ்வரி, சிவசங்கரி, கராத்தே பயிற்சியாளர் சென்சாய் வி.ரெங்கநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img