தேசிய அளவிலான ஜூனியர் தாங்-டா சாம்பியன் ஷிப் போட்டி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அணியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி வி.மேரிபிரியதர்ஷினி (60 கிலோ எடை பிரிவில்) வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆண்கள் பிரிவு
ஆண்கள் பிரிவில் ஸ்டேன்ஸ் சிபிஎஸ்சி பள்ளி மாணவர் வி. ஜெயசிம்மன் வெள்ளிப் பதக்கம் வென்றார். நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஜி.பி. திவ்யா (52 கிலோ எடைபிரிவில்) காலிறுதியில் போட்டியிட்டு வெளியேறினார்.
கோபால்நாயுடு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.எஸ்.ஷிவானி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வி.யூ.ஹேமந்த் (52 கிலோ பிரிவில்) கால் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறினார்.
வெற்றி பெற்ற வீரர்களை தமிழ்நாடு தாங்-டா சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், பெற்றோர் வாழ்த்து கூறினர்.