fbpx
Homeபிற செய்திகள்ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா 100,000 இவி விற்பனை செய்து சாதனை

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா 100,000 இவி விற்பனை செய்து சாதனை

இந்தியாவின் 4 டபுள்யூ-இவி வளர்ச்சியில் முக்கியப் பங்களிப்பை வழங்கும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா, இந்தியாவில் 100,000 இவி விற்பனை மைல்கல்லைத் தாண்டிய சாதனையை அறிவித்துள்ளது.

இந்த ஆட்டோ-டெக் நிறுவனம் நீடித்த எதிர்காலத்திற்கான தூய்மையான, அறிவார்ந்த போக்குவரத்து தீர்வுகளை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ளது. ஸ்மார்ட் தயாரிப்புகளை மட்டுமின்றி, தேவையைப் புரிந்து செயல்படும் அறிவார்ந்த, ஒருங்கிணைந்த சூழல் அடிப்படையிலான தீர்வுகளையும் வழங்குகிறது.

இந்த சாதனை இந் நிறுவனத்தின் பெரிய அளவிலான இவி போர்ட்ஃபோலியோவின் வலுவான செயல்திறனால் கிடைத்தது. இது பல் வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

அன்றாட நகரத் தேவைகள் முதல் ஒவ்வொரு பயணத்திலும் செழுமையான அனுபவம் வரை, எம்ஜி-யின் பல்வகை இவி-க்கள் இந்திய நுகர்வோருக்கான புதுமை, செயல்திறன், நீடித்த போக்குவரத்து ஆகியவற்றிற்கான இப்பிராண்டின் உறுதிப்பாட்டைக் குறிக்கின்றன.

சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரு வதால், எம்ஜி அதன் போர்ட் ஃபோலியோவை விரிவுபடுத்தவும் புதிய ஆற்றல் பவர்டிரெய்ன்களையும் சேர்க்கத் தயாராக உள்ளது.

இந்த சாதனை குறித்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அனு ராக் மெஹ்ரோத்ரா பேசுகையில், “100,000 இவி விற்பனை மைல் கல்லைக் கடந்தது, நீடித்த தேர்வுகளில் இந்திய வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.

இந்த முக்கியமான மைல் கல்லுக்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் அனைத்து குழுவிற்கும் நன்றி கூறுகிறேன்” என்றார்.

இக்கார் தயாரிப்பு நிறுவனம், பல இணைந்த சூழல் அடிப்படையான திட்டங்களை முன்னோடியாக செயல்படுத்தி, இவி தொழில் துறையில் முதல் முறையாக பல புதுமையான முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார வாகனச் சூழலில் சுற்றுச்சுழல் என்ற நிலைத்தன்மை முறைமை உருவாக்கப்படுகிறது. இந்த முயற்சிகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

இவை அனைத்தும், தொழில்நுட்பப் புதுமையின் மூலம் மேலும் வலுவானதும், வாடிக்கையாளருக்கு உகந்ததுமான மின்சார வாகனச் சூழலை உருவாக்குவதில் இப்பிராண்டின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.

படிக்க வேண்டும்

spot_img