ஜியோ பிபி புதிய டீசல் அறிமுகம்
ஜியோ பிபி தனது டீசலை, ஆக்டீவ் தொழில்நுட்பத் துடன் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இது, இந்திய நுகர்வோருக்கு டீசல் தரத்தை உயர்த்த ஏற் படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆடிட வைஸ்டு டீசல், நிறுவனத்தின் நெட்வொர்க்குகள் மூலம் கிடைக்கும் 4.3%(வரை) மேம்பட்ட எரி பொருள் சிக்கனத்தின் காரணமாக டிரக்கர்களுக்கு ஒரு வாகனத்திற்கு ரூ.1.1 லட்சம் வரை ஆண்டு சேமிப்பு கிடைக்கும்.
இந்த புதிய உயர் செயல்திறன் டீசல் சலுகை அனைத்து ஜியோ-பிபி விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். இந்திய சந்தையில் முதல் முறையாக கூடுதல் விலை இல்லாமல் வழக்கமான விலையில் வழங்கப்படும்.
ஜியோ-பிபி சிஇஓ, ஹரிஷ் சி மேத்தா கூறுகையில், “ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்களுக்கு முக்கியமானவர்கள் தான் என்றாலும், ஜியோ-பிபிஐப் பொறுத்தவரை டிரக்கர்ஸ்களுக்கு என்று எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு.
ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகளில் டிரக்கர்களை இயக்குவதற்கு அவர்களுக்கு ஆகும் செலவில் பாதிக்கும் மேல் எரிபொருளுக்காக செலவிடப்படுகிறது என்பதை புரிந்துகொண்டிருக்கிறோம்.
எரிபொருள் செயல்திறன் மற்றும் எஞ்சின் பராமரிப்பு பற்றிய அவர்களின் கவலைகளை எளிதாக்க, ஜியோ-பிபி புதிதாக தனிப்பயனாக்கப்பட்ட சேர்க்கையை உருவாக்க சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளது.
குறிப்பாக இது, அதிக செயல்திறன் கொண்ட இந்த டீசல் இந்திய வாகனங்கள், இந்திய சாலைகள் மற்றும் இந்திய ஓட்டுநர் நிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.



