சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் (SIA) குறைந்த கட்டண துணை நிறுவனமான இந்தியா-ஸ்கூட் 2023 மே 16 முதல் 20 வரை ஒரு நெட்வொர்க் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
அமிர்தசரஸ், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள வாடிக்கையாளர்கள், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள 17 செல்லுமிடங்களுக்கு மிகக்குறைந்த ரூ.6,200*ல் இருந்து தொடங்குகின்ற விமானக் கட்டணங்களில் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட எதிர்பார்க்கலாம்.
31 ஆகஸ்ட் 2023 வரையிலான பயணங்களுக்கு, இந்தோனேசியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஸ்கூட்டின் நெட்வொர்க்குகள் முழுவதிலும் பல்வேறு சேருமிடங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யமுடியும்.
இந்தியாவிலிருந்து நேரடி விமானங்களைத் தவிர, வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் வழியாக உலகெங்கிலும் உள்ள பிற இடங்களுக்கும் இணைக்கத் தேர்வு செய்யலாம், அங்கு உலகின் சிறந்த விமான நிலையமான சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயண இடைவெளியில் தங்குவதற்கான இந்த விருப்பத்தை அவர்கள் கொண்டுள்ளார்கள்.
ஸ்கூட்டின் நெட்வொர்க் தற்போது 15 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 71 இடங்களை உள்ளடக்கியது, அவற்றில் 65 இடங்கள் மே 2023 வரை முன்பதிவு செய்யக் கிடைக்கின்றன.
ஸ்கூட் சிங்கப்பூர் மற்றும் ஆசியா-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறு செல்லுமிடங்களுக்கு இடையே பயணிகள் விமானங்களை இயக்குகிறது.
கூடுதல் தகவலுக்கு: லீttஜீs://ஷ்ஷ்ஷ்.யீறீஹ்sநீஷீஷீt.நீஷீனீ/மீஸீ



